onsdag 27. mars 2013

யார் தருவார் இந்த அரியாசனம்?

யார் தருவார் இந்த அரியாசனம்?



[ மாணிக்க
வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி ]

யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி 
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி 
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு

யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி 
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன் 
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?

திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1966

Ingen kommentarer:

Legg inn en kommentar