torsdag 4. august 2011
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறப்பாரா?
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?
அத்தை மகள் ....
முத்து முத்துப் பேச்சு, கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா ....
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்னழகை விடுவாரா?
பெண்னழகை விடுவாரா?
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா ....
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா?
அத்தை மகள்....
கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
தொட்டுவிட மனமில்லையா....
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி
கருணை வரவில்லையா?
கருணை வரவில்லையா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா....
மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு
சொல்லாமல் விடுவேனா?
அத்தை மகள்...
படம்: பணக்காரக் குடும்பம்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
Ingen kommentarer:
Legg inn en kommentar