torsdag 4. august 2011

அவள் இல்லாமல் நான் இல்லை



ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஒரு பெண்ணை ...

அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை.....

கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
கொடி மின்னல்....
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள் ...
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணை ...

கலை அன்னம் போல் அவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
கிளை வண்ணம் போல் அவள் தேகம்
இதலில் மதுவோ குறையாது
கலை அன்னம்....
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள் ....

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணை ...

படம் : தெய்வத்தாய்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்


 

Ingen kommentarer:

Legg inn en kommentar