torsdag 4. august 2011
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா (2)
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும் (2
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை (2
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு (2)
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு (2)
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
படம்: சுமைதாங்கி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
Ingen kommentarer:
Legg inn en kommentar